மாநாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இபிஎஸ் துாண்டுதல்? - காவல் நிலையம் ஓடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!
சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது புகார்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம், புகழேந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புகழேந்தியின் காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கலவரம் ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி சேலம் எடப்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவினை ஓபிஎஸ் ஆதரவாளரான சேலம் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஏ.ராஜேந்திரம் அளித்துள்ளார்.
சேலம் மாநாடு சம்பந்தமாக சேலம் மண்டலத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வா புகழேந்தி செய்தியாளரிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.