கொலை மிரட்டல்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பரபரப்பு புகார்!
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரண்யா பொன்வண்ணன்
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகாமையில் ஸ்ரீதேவி என்பவரின் வீடு அமைந்துள்ளது.
இவர்களுக்கு இடையில் கேட்டை திறக்கும் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி வீட்டில் 20 அடி நீள இரும்பு கேட் இருக்கிறது. இந்த கேட்டை திறக்கும்போது, அது நடிகை சரண்யாவின் கார் மீது உரசுவதுபோல் போல வேகமாக நகர்ந்துள்ளது.
போலீசில் புகார்
இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் சரண்யா குடும்பத்தினர் வீடுபுகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், சரண்யா குடும்பத்தினர் தங்களை மிரட்டிய சிசிடிவி காட்சிகளுடன் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
