மாட்டு சாணம் திருட்டு...போலீசார் வழக்கு பதிவு!

Police chhattisgarh
By Thahir Jun 21, 2021 08:26 AM GMT
Report

சத்தீஷ்காரில் கோதான் நியாய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநில அரசு, ஒரு கிலோ ரூ.2 என மாட்டு சாணம் கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த அறிவிப்பினை முன்னிட்டு கிராம மக்கள் மாட்டு சாணம் சேகரித்து வருகின்றனர்.

மாட்டு சாணம் திருட்டு...போலீசார் வழக்கு பதிவு! | Police Chhattisgarh

இந்த நிலையில், கோர்பா மாவட்டத்தில் துரனா கிராமத்தில் 800 கிலோ எடை கொண்ட மாட்டு சாணம் களவு போயுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,600 ஆகும். இதுபற்றி தீப்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.