போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது : காடுவெட்டி குரு மகன் எச்சரிக்கை
5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாதுகாடுவெட்டி குருவின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பல்வேறு பாமக மற்றும் வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள் பரபரப்பான கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாமக நிர்வாகி காடுவெட்டி குருவின் மூத்த மகன் கனல் அரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இதனிடையே கனல் அரசன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக, அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு 10 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு சூர்யாவின் வீட்டின் முன்பு நின்றால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய போலீசால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது. இயக்குனர் ஞானவேலை காப்பாற்றி விட முடியாது.
ஜெய்பீம் படத்தில், அந்த குறிப்பிட்ட காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை. வன்னிய சமூக மக்களை புண்படுத்திய மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது; எந்தப் படமும் எடுக்க முடியாது. இயக்குனர் ஞானவேல் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.