யூ-டியூபர் மதனை சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறை!
arrest
youtuber
madan
By Irumporai
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதன்,தற்போது தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
பெண்களிடம் ஆபாசமாக பேசியது மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மதனிடம் விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்