தவறுதலாக மாஸ்க் அணியாத அப்பாவி இளைஞரை அடித்து உதைத்த போலிஸார் - இந்தூரில் அரங்கேறிய கொடூரம்!

police youth mask Indore
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களைப் பிடித்து சிறையில் அடைக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ண கெயர் என்பவர், மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது பணியிலிருந்த இரண்டு போலிஸார், ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு அவரை காவல்நிலையம் வரும்படி அழைத்துள்ளனர்.

இதற்கு கிருஷ்ண கெயர்,வரும் வழியில் தனது முகக்கவசம் கீழே விழுந்துவிட்டதாகவும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் செல்வதாகவும் அவருக்கு உணவு கொடுத்துவிட்டு நான் காவல்நிலையம் வருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் அந்த இரண்டு காவலர்களும் அவரை வலுக்கட்டாயமாகக் காவல்நிலையம் வரும்படி, சட்டையைப் பிடித்து இழுத்துள்ளனர்.

இதற்கு கிருஷ்ணகெயர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரண்டு போலிஸாரும் சேர்ந்து கிருஷ்ண கெயரை கீழே தள்ளி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கிருஷ்ண கெயரை போலிசார் தாக்கும்வீடியோ இணையத்தில் வேகமாக பரவத்தொடங்கியதால் ,தாக்குதல் நடத்திய இரண்டு காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் பலர் பிரச்சார கூட்டங்களில் முககவசம் இல்லாமல் பிரச்சாரம் செய்ய அனுமதித்த நாட்டில், மருத்துவமனைக்கு உணவு கொண்டு சென்றவரிடம் முகக்கவசம் இல்லாமல் இருந்ததற்கு இப்படியா தண்டிப்பது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.