கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி - பெண்கள் படுகாயம்

Cricket Hyderabad
By Thahir 1 வாரம் முன்

கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை வாங்க குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி மிரட்டல் வெற்றி பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 வது போட்டி வருகிற 25ம் தேதி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி - பெண்கள் படுகாயம் | Police Baton Cricket Fans Women Seriously Injured

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. டிக்கெட்டுகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார். போலீசார் நடத்திய தடியடியில் பெண்கள், இளைஞர்கள் என பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.