சென்னையில் நடுரோட்டில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய போலீஸ்..!

Chennai Tamil Nadu Police
By Thahir May 15, 2022 10:46 PM GMT
Report

சாலையில் நடந்து சென்ற நடத்துனர் கீழே எச்சில் துப்பிய போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தன்னை நோக்கி துப்பியதாக நினைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பேருந்துநிலையம் எதிரே நேற்று காலை சாலையில் சென்ற நடத்துனர் ஒருவர் எச்சில் துப்பியுள்ளார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லுாயிஸ் என்ற காவலர் தன்னை நோக்கி துப்பியதாக கருதி அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் அந்த நடத்துனர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நடத்துனரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துமனையில் அனுமதித்தனர்.

நடத்துனரை தாக்கிய லுாயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சைதாப்பேட்டை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.