“ஏ.சி இருக்குற வீடுதான் திருட ஈசி” - திருடனின் பகீர் வாக்குமூலம்

tuticorin thief arrest
By Petchi Avudaiappan Aug 05, 2021 05:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் உள்ள 6 வீடுகளில் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் வரை 6 வீடுகளில் கொள்ளை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது. மேலும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், கொள்ளை நடந்த இடங்களில் பதிவாக கைரேகை ஆகியவற்றை கொண்டும் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் என்பவர் வீடுகளில் புகுந்து நகை திருட்டு மற்றும் வழிப்பறி, இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் தேடப்பட்டு வந்த ரவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

“ஏ.சி இருக்குற வீடுதான் திருட ஈசி” - திருடனின் பகீர் வாக்குமூலம் | Police Arrested Thief In Kovilpatti

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தனியாகத்தான் எங்கும் ரவி திருடச் செல்வார் என்றும், கொள்ளையடிக்கும் பணத்தில் தன்னுடைய வழக்கு செலவிற்காக குறிப்பிட்ட பணத்தை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில், ஸ்டார் ஹோட்டல்களில் சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர் ஏ.சி இருக்கும் வீடுகளில் மட்டுமே கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

காரணம் ஏ.சி வசதி உள்ள வீடுகளில் இருப்பவர்கள் குளிரில் நன்றாக அசந்து தூங்குவார்கள் என்பதால் ரவி அந்தந்த வீடுகளில் தனது திட்டத்தை எளிதாக நிறைவேற்றியுள்ளார். இதனையடுத்து ரவியிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.