மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை - பிரபல தயாரிப்பாளர் கைது...!
மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை
மும்பையில் மாடல் அழகி மற்றும் நடிகையுமான ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில், தன்னை பாலியல் ரீதியாக சுர்ஜீத் சிங் ரத்தோர் துன்புறுத்துவதாகவும், எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அதில் எனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகாத செய்திகள், வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டு வெளியிட்டு அவதூறு ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிரபல தயாரிப்பாளர் கைது
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாடல் அழகியை துன்புறுத்தியதாகவும், மானபங்கப்படுத்தியதாகவும் கூறிய வழக்கில் மும்பை காவல்துறையினரால் ராஜ்புத் கர்னி சேனாவின் தேசிய துணைத் தலைவர் ரத்தோரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, இவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, ஆபாச செய்திகளை அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.