கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை - குடும்பத்தையே கைது செய்த போலீசார்!
கல்லுாரி மாணவி ஒருவருக்கு தத்தெடுத்த தந்தை மற்றும் அவர்களது மகன்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் மாணவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில்,தான் சென்னையில் உள்ள பெண்கள் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், தான் பிறந்த போது தாய் இறந்து விட்டதாகவும்,அதையடுத்து தந்தையும் இறந்து விட்டதாகவும் தனக்கு ஒரு சகோதரி,இரண்டு சகோதரர்கள் உள்ளதாகவும் அவர்கள் தன்னை வளர்க்க முடியாமல் பிறந்து ஒரு மாதம் ஆன போது தத்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை பகுதியைச் சேர்ந்த ஷெரீஃப்-ஜமீலா தம்பதி மாணவியை தத்தெடுத்து, அவர்களுக்கு மகள் இல்லாத காரணத்தால் சொந்த மகள் போலவே வளர்த்தார்கள் என தெரிவித்துள்ளார்.
ஷெரீஃப் - ஜமீலா தம்பதிக்கு 34 வயதில் இம்தியாஸ், 29 வயதில் இர்ஃபான் மற்றும் 26 வயதில் அனீஃப் என்ற மகன்கள் உள்ள நிலையில், 64 வயதான வளர்ப்பு தந்தை ஷெரீஃப் மகள் என்றும் பாராமல் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
மேலும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஷெரீஃப் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை அறிந்த மகன்கள் மூவரும் அடுத்தடுத்து மாணவியிடம் தகாத உறவில் ஈடுப்பட்டுள்ளனர்.
உடலாலும் மனதாலும் பாதிப்படைந்த மாணவி தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஜமீலாவிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளார். அதற்கு, தனக்கு எல்லாம் தெரியும் எனவும் வீட்டில் இருக்கும் ஆண்களின் விருப்பபடி நடந்துக்கொள் அதுதான் உனக்கு நல்லது எனவும் ஜமீலா கூறியுள்ளார்.
இதற்கிடையே மாணவி கர்ப்பமானதால் ஷெரீஃப், தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருவை கலைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் இதற்கு பிறகும் 4 பேரும் அதே உறவை மாணவியுடன் தொடர்ந்திருக்கிறார்கள்.
இதனால் மனமுடந்த மாணவி தனது சகோதரிக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை கூறியதை அடுத்து இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் , பாதிக்கபட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் போக்சோ சட்டத்தில் ஷெரீஃப், ஜமீலா, அவர்களது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளைய மகன் அனீஃபை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கைதானவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர் தற்போது அவரது சகோதரியின் பாதுகாப்பில் இருக்கிறார்.
மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் விரைவில் ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.