கழிவறையில் நடைபெற்ற விபசாரம்.. கர்நாடாகாவை அதிரவைத்த சம்பவம்

By Petchi Avudaiappan May 10, 2022 12:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடகா மாநிலத்தில் கழிவறையில் ரகசிய அறை வைத்து விபச்சாரம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஒரு இடத்தில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்றனர். அங்கு வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு சாதாரண கடை போல் இருந்த  சம்பந்தப்பட்ட இடத்தில் பார்த்த போது அங்கு யாருமே இல்லாததால், ஒரு வேளை கழிவறையில் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் கழிவறையை திறந்து பார்த்த போதும் அங்கு யாருமே இல்லை என்பதால் வழக்கம் போல் விபச்சார கும்பல் தப்பித்து விட்டதா? இல்லை தவறான தகவல் தரப்பட்டதா? என்ற குழப்பத்துடன் அங்கிருந்து நகர தொடங்கினர். 

அப்போது எங்கிருந்தோ ஒரு முனகல் சப்தம் வந்துள்ளது. யாரும் இல்லாத இடத்தில் எப்படி இந்த முனகல் சப்தம் என எண்ணிய போலீசார் கழிவறையை நன்றாக உற்றுநோக்கிய போது டைல்ஸுக்கு மத்தியில் ஒரு சிறிய கதவு இருந்ததை கண்டுபிடித்தனர். 

அதனைத் திறந்து பார்த்த போது உள்ளே விபச்சார அழகி, வாடிக்கையாளர், புரோக்கர் என மூவரும் இருந்துள்ளனர். முட்டி போட்டுக் கொண்டு செல்லும் அளவுக்கு மிகச் சிறிய அறையில் விபச்சார அழகியையும் வாடிக்கையாளரையும் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களை வெளியே வர சொல்லிய அதிகாரிகள் அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.