அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர்

Police Tirunelveli Ganja
By mohanelango May 20, 2021 09:31 AM GMT
Report

நெல்லை உடையார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாரிடம் புகார் தெரிவித்தவரை மிரட்ட தெருவில் அரிவாளுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்.

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை அரிவால் கொண்டு விரட்டும் காட்சிகள் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

நெல்லை உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாரிடம் தகவல் அளித்த நபர்களை மிரட்டுவதற்காக உடையார்பட்டி மேகலிங்கபுரம் சாலையில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் நண்பர்களுடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி வந்து மிரட்டும் தோணியில் பேசி வந்துள்ளார்.

மேலும் உடையார்பட்டி மகாலிங்கபுரம் சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளை அரிவாள் கொண்டு வெட்டுவது போல மிரட்டி வந்துள்ளார்.

அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் | Police Arrest Youngster Roaming Around With Arms

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதை அறிந்த மதன் உள்ளிட்ட நண்பர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கர ஆயுதங்களுடன் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக வெள்ள பாண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கர ஆயுதத்துடன் சாலையில் சுற்றித்திரிந்து இருசக்கர வாகன ஓட்டிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதன் உள்ளிட்ட நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.