ஓநாய் முகமூடி அணிந்து புத்தாண்டு கொண்டாடியமர்ம நபர் -கைது செய்த காவல்துறை
பாகிஸ்தானில் ஓநாய் போன்ற முகமூடி அணிந்த நபரை, பெஷாவர் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முகக்கவசங்கள் என்பது தற்போது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது .
கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், தற்போது விதவிதமான மாஸ்க்-கள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவார் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று ஒருவர் ஓநாய்போன்று முகமூடி அணிந்து பொதுமக்களை பயமுறுத்தும் விதத்தில் முகமூடி அணிந்திருந்தார்.
உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். மேலும் அவரது ஓநாய் முகமூடியை கிண்டலடித்து நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பல நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.