போலி ஆபாச படங்களை வைத்து 100 பெண்களை மிரட்டியவர் கைது
புதுடெல்லியில் சமூக வலைதளங்களில் போலி ஆபாசப் படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பணம் பறித்த இளைஞரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர்,இளம் பெண்ணுக்கு செல்போனில் அழைத்து உங்களுடைய ஆபாச படங்கள் என்னிடம் உள்ளன.
அவற்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும். படங்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்,அந்தப் பெண் ஆதாரம் கேட்டபோது, சில படங்களை அனுப்பிஉள்ளார்.அது போலி என்பதை உணர்ந்த அந்த பெண், டெல்லி போலீசாரிலம் புகார் கொடுத்துள்ளார்.
போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு அந்த இளைஞரை கைது செய்துள்ளனர், விசாரணையில் அவர் நொய்டாவைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் சுமித் ஜா என்பது தெரிய வந்துள்ளது.
மேலும்,பட்டதாரியான சுமித் ஜா, ஒருவருடைய சமூக வலைதளத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அவர்களது புகைப்படங்களை திருத்தம் செய்து, ஆபாசமாக மாற்றி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, பணம் கேட்டு மிரட்டுவார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, 100 பெண்களை மிரட்டி, பணம் பறித்துள்ளதாக டெல்லிபோலீசார் கூறியுள்ளனர்.