வாகனங்களை நூதன முறையில் தொடர்ந்து திருடும் நபர் வசமாக போலீசில் சிக்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் கானாமல் போவது வாடிக்கை .
இது குறித்து வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனா். இது சம்மந்தமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனா்
இந்நிலையில் இன்று நடைமுறையில் இருந்த கொரோனோ ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சோளிங்கர் காவல் துறையினர் கருமாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது முகக் கவசம் இன்றி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனா். இந்நிலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனையிட்டதில் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார்.
சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனா்.
அவர் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் வேலுமணி என்பதும் இவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் களவாடிய வாகனம் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் வீட்டில் களவாடிய இரண்டு இருசக்கர வாகனங்கள் இருப்பதும் தெரியவந்து. இந்நிலையில் போலிஸார் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வேலுமணியை கைது செய்தனா்.