போலீசார் அடித்து துன்புறுத்துறாங்க ..பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் குற்றச்சாட்டு
ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அக்குபஞ்சர் மருத்துவர் போலீசார் தன்னை அடித்து துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் மீது குற்றச்சாட்டு
மதுரையில் நேற்று முன்தினம் இரவு மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ஆர்எஸ்ஏஸ் பிரமுகர் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நெல்பேட்டையைச் சேர்ந்த சம்சுதீன், மற்றும் உசேன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே மாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். தன்னை விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீசார் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவர் இது போன்று குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளனர்.