ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து விலகல்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து போலந்து விலகக்கூடும் என தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து போலந்து அரசு வெளியேறுவதை போலெக்ஸிட் (Polexit) என்று அழைக்கின்றனர்.
போலந்து விலகினால் மக்கள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்கக் கூடும் என்பதால், அதனை கண்டித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் போராட்டம் வெடித்தது.
போலெக்ஸிட் பயத்தின் மத்தியில், ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் போலந்து முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
தலைநகர் Warsaw-வில் நடந்த பேரணியில் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் தலைவரும் இப்போது எதிர்க்கட்சி சிவிக் தளத்தின் தலைவருமான டொனால்ட் டஸ்க் (Donald Tusk), "ஐரோப்பிய போலந்தைப் பாதுகாக்க" நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு திருப்தி அடைந்ததுடன், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்தார்.
மேலும், போலந்தின் அரசியலமைப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.