‘போக்கிரி’ பட நாயகியா இது? குடும்பத்தினரோடு இருக்கும் கலர்ஃபுல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
கடந்த 2017-ம் ஆண்டு போக்கிரி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அதுவரை நடன இயக்குனராகவும் நடிகராவும் திகழ்ந்து வந்த பிரபு தேவா, தமிழில் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.
நடிகர்கள் விஜய், அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன், நாசர் என்று பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வெற்றி திரைப்படமாக மாறியது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் முதலில் ரவுடியாகவே காட்டப்படிருப்பார். படத்தில் வில்லனாக அலிபாபா என்ற கதாப்பத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜின் கூட்டத்தில் மோனா என்ற முக்கிய வேடத்தில் நடிகை பிருந்தா பரேக் நடித்திருந்தார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த பிருந்தா 2002-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கிறார்.
ஆனால், நெகடிவ் ரோலில் போக்கிரி படத்தில் நடித்ததன் மூலமே இவர் பெரியளவில் பிரபலமானார். போக்கிரி படத்திற்கு பின்னர் பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். அதேபோல சில மியூசிக் ஆல்பங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டிற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் சினிமாவில் நடிக்கவில்லை.
இந்நிலையில் தான் நடிகை பிருந்தா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் கலர்ஃபுல்லான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
எதிர்க்கட்சிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் ரணில்...! தண்டனைக்கு பயந்து புதிய அரசியல் தஞ்சம் IBC Tamil