பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நாட்டின் ஒரு பகுதியே - மாற்றமில்லை..! இந்திய வெளியுறவுத்துறை!!
மத்திய அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே என்று மக்களவையில் குறிப்பிட்டது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
PoK இந்தியாவின் ஒரு பகுதியே
மக்களவையில் அவரின் அறிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சரின் அறிக்கையை தான் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டு, PoK பற்றிய தங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றார்.
மாற்றத்திற்கு அவசியமில்லை
PoK பகுதிகளை தாங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுகிறோம் என்ற அவர், அது குறித்து வெளியான அறிக்கையை மாற்றுவதற்கான காரணம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, "PoK இந்தியாவுடையது "என்று அழுத்தமாக அரிந்தம் பாக்சி பதிலளித்தார்.