இப்படி கூட நடக்குமா? மீனின் முள் குத்தி பெண் பலியான சோகம் - அதிர்ச்சி சம்பவம்!
திருக்கை மீனின் முள் குத்தி பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கை மீன்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், பழங்காலமேட்டைச் சேர்ந்தவர் கனகவல்லி (57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
கனகவல்லி வழக்கம்போல் நேற்று ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியுள்ளது. இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் கனகவல்லி மயக்கம் அடைந்தார்.
பெண் பலி
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . அங்கு கனகவல்லியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது.