நீட் விலக்கு மசோதா விவகாரம்..முதலமைச்சரை பாராட்டிய கவிஞர் வைரமுத்து
சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை கிடப்பில் போட்டார்.இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நீட் தேர்வு மசோதா குறித்து பேசியிருந்தார்.
இதனிடையே நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பினார். இதையடுத்து நேற்று மீண்டும் கூடிய சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பட்டள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நீட் தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார்
முதலமைச்சர் எடுத்தது கண்டார் இற்றது கேட்டார் என்று விரைந்து வினைப்படுகிறார்,
முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்
நல்லது வாழ்க,நலமே சூழ்க என முதலமைச்சரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.
நீட்தேர்வு மசோதாவை
— வைரமுத்து (@Vairamuthu) February 9, 2022
ஆளுநருக்கே திருப்பி அனுப்பி
இறையாண்மைக்குட்பட்டு
முறையாண்மை செய்திருக்கிறார்
முதலமைச்சர்
"எடுத்தது கண்டார்
இற்றது கேட்டார்" என்று
விரைந்து வினைப்படுகிறார்
முன்னோடிகளை
முந்தும் பாதையில்
முன்னேறிக் கொண்டிருக்கிறார்
நல்லது வாழ்க
நலமே சூழ்க@mkstalin | #NEET