மருது பாண்டியர்கள் என்ன தீவிரவாதிகளா? - மத்திய அரசை கடுமையாக வெளுத்து தள்ளிய வைரமுத்து

condemned central government poet vairamuthu
By Nandhini Jan 18, 2022 10:05 AM GMT
Report

மருது பாண்டியர்கள் என்ன தீவிரவாதிகளா ? என்று மத்திய அரசுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

குடியரசுத் தினத்தையொட்டி டெல்லியில் வருடம் தோறும் குடியரசு தின அணிவகுப்பு நடப்பது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும்.

தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெற்றன. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் அலங்கார ஊர்தி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு திமுக எம்.பி கனிமொழி, மதுரை எம்.பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது டுவிட்டர் பக்கதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது’ என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.