சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை - இந்திய ஹாக்கி வீரர் மீது போக்ஸோ வழக்கு!
இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் புகார்
இந்திய ஹாக்கி அணியில் தடுப்பாட்டக்காரராக இருப்பவர் வருண் குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றுள்ளார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சிறுமியாக இருந்தபோது தன்னை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வருண் குமார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு
அந்த புகாரில், தான் 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினார் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக வருண் குமார் மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.