ஓரியண்டல் பேங்க் மற்றும் யுனைடெட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய செக் புக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC)மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளின் பழைய செக் புக் நிறுத்தப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய செக் புக்கை பஞ்சாப் நேஷனல் வங்கியின் செக் புக்குடன் புதுப்பிக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பழைய செக் புக்கை வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்காது என்றும், பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் பழைய செக் புக்கை புதுப்பிக்கப்பட்ட பஞ்சாப் வங்கியின் ஐஎஃப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் செக் புக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.