இனி திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை - ராமதாஸ் அதிரடி முடிவு
அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதி.முகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 25 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதனிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் பட்ஜெட்டில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றும், எதிர்கட்சியாக அதிமுக இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்காகும். அதற்கு தயாராகும் வகையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமு.கவுடன் கூட்டணி இருக்காது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான் எனவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.