துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம் வந்தால் பாமக ஆதரிக்கும்: அன்புமணி
துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பாமக ஆதரிக்கும் என்றும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி தனது ட்விட்டர் பதிவில் :
''தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
{.
அதைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கட்டுப்பாட்டில் இருந்தால்தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாச்சார நலனையும் காக்க முடியும்.
அந்த வகையில் இந்தச் சட்டத் திருத்தம் மிகவும் அவசியமானதாகும். எனவே, துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பாமக ஆதரிக்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.