எதற்கும் துணிந்தவனை எதிர்க்கும் பாமக - போலீஸ் பாதுகாப்பில் சூர்யா குடும்பம்

suriya pmk etharkkumthunindhavan
By Irumporai Mar 09, 2022 01:56 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சூர்யா. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உருவாகி உள்ளது.

பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய பாண்டிராஜ் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை அவமதித்ததற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பாமக சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா, வன்னியர் சங்க மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது