பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்மைத்தன்மையை சிதைத்து விடும் - பாமக எதிர்ப்பு..!
இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும்.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும்.
அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என 22-வது சட்ட ஆணையத்திடம் பாமக சார்பில் கருத்துக்களை சமர்ப்பித்தார் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.