பாமக மாநில தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 83,876 புதிய கோவிட் பாதிப்புகளும், 895 கோவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களின் விகிதம் தற்போது 96.19% ஆக உள்ளது.
தமிழகத்திலும் பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் குறைந்துள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
முதல் இரண்டு கொரோனா அலைகளை காட்டிலும் தற்போது உள்ள மூன்றாவது அலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.