பள்ளி தாளாளர் காலில் விழுந்து கெஞ்சிய எம்எல்ஏ - நடந்தது என்ன?
பள்ளி தாளாளர் காலில் விழுந்து எம்எல்ஏ விழுந்து கெஞ்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலை மறியல்
சேலம் மாவட்டத்தில் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பள்ளியை தனியார் நிறுவனம் வாங்கி விட்டதால் பள்ளியை மூடப்போவதாக தகவல் பரவியதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலில் விழுந்த எம்எல்ஏ
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், பள்ளி தாளாளரின் காலில் விழுந்து, பள்ளியை மூட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியை மூடப்போவதில்லை என கூறியதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வில் மாற்று கட்சியினர் எம்எல்ஏ அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்ற பின்னர் ஒழுக்கம் கற்று தரும் இடத்தில இப்படி அசிங்கம் செய்து விட்டார்கள். அவர்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மாணவ மாணவிகளின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.