விவசாய நிலத்தில் நிலக்கரி சுரங்கம் : எப்படி மாநில அரசுக்கு தெரியாமல் இருக்கும் ? - கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அரசு திட்டத்திற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
தமிழகத்தில் காவேரி டெல்டா வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அதில் , மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் விடப்பட்டு இருக்காது, ஆனால் தமிழ்க தொழில்துறை அமைச்சர் தெரியாது என கூறியுள்ளார்.

சூழ்ச்சி
காவிரி டெல்டாவை அழிக்க சூழ்ச்சி நடக்கின்றது, மத்திய அரசு டெண்டர் விடும் அளவுக்கு சென்றுவிட்டது , ஆனால் தமிழக அரசு இன்னும் அமைதியாக இருக்கின்றது , தமிழகத்தில் 6 புதிய சுரங்களுக்கு அனுமதி தரமாட்டோம் என மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் இது தமிழகத்தின் பிரச்சினை என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.