அரக்கோணம் இரட்டைக் கொலைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை - விசாரணை அதிகாரி தகவல்

admk dmk pmk vck arakkonam murder
By mohanelango Apr 13, 2021 12:32 PM GMT
Report

அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் (விசிக) சேர்ந்த அர்ஜூன், சூர்யா என்கிற இரண்டு இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர்.

தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.


இந்த இரட்டைக் கொலைக்குப் பின்னால் பாட்டாளி மக்கள் கட்சி தான் இருப்பதாக விசிக குற்றம்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், “அரக்கோணம் இரட்டை கொலைக்கு வன்னியர் - தலித் ஏற்றத்தாழ்வே காரணம். இதில் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை; இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும், நிலமும் வழங்க வேண்டும்” என்றுள்ளது.