தமிழர்கள் இல்லாத CSK அணியினை தடை செய்ய வேண்டும் : பாமக வலியுறுத்தல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்யவேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேர்வையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை
இன்று தமிழ்க சட்டப்பேர்வை விளையாட்டுத்துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது ,அதில் பேசிய பாமகவை சேர்ந்த தர்மபுரி எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை தடை செய்ய வேண்டும் என கூறினார்.
தமிழக வீரர்கள் இல்லை
ஐபிஎல் தொடரில் தமிழகம் சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் தமிழகத்தில் சிறந்த வீரகள் இருந்தும் அவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக வீரர்களை ஒதுக்கிவிட்டு, சுய லாபத்திற்காக மட்டுமே தமிழக அணி போல விளம்பரப்படுத்தி தமிழர்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறது ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து அரசு எந்த பதிலும் இன்னும் அளிக்கவில்லை.