பாமக தேர்தல் அறிக்கை: கடைசி பக்கத்தில் தேமுதிக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிடுவதற்கு முன்பாகவே பாமக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என பாமக தேர்தல் அறிக்கையில் உள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும், அரசு பள்ளிகளில் ஒப்பந்த, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம். மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி.
அனைவருக்கும் இலவச மருத்துவம், வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு; தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையில் கூட்டணி கட்சிகளான அதிமுகவின் இரட்டை இலை, பாஜகவின் தாமரை சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் தேமுதிகவின் முரசு சின்னம் பாமகவின் அறிக்கை புத்தகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக - அதிமுக இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.