பாமக தேர்தல் அறிக்கை வெளியானது
Anbumani Ramadoss
PMK
By Fathima
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள்
*5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
*2026–27 மற்றும் 2027–28 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
*ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
*பட்டப்படிப்பை முடித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் நிதி உதவி வழங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கவும், காலியிடங்களை நிரப்பவும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.