அவைக்கு வராத பிரதமர் மோடி : நான் பேசியதை கண்டு பயந்துவிட்டாரா? - ராகுல் காந்தி
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சீன விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசத் ஆரம்பித்ததும், பாஜக எம்.பி.க்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மக்களவையில் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார்.

இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா,சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" நிகழ்த்த திட்டமிட்டிருந்ததான எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது.
இதனை தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்த, நிலையில் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல் என்ற கேள்விக்குகே இடமில்லை. உண்மை என்ன என்னவென்றால் மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என குறிப்பிட்டுள்ளார்.