பிரதமரா இருந்தா எனக்கென்ன... சும்மா உட்காருங்க - அதிர வைத்த சபாநாயகர்

borisjohnson lindsayhoyle
By Petchi Avudaiappan Nov 21, 2021 06:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் குறுக்கிட்டதால் சபாநாயகர் கடும் அதிருப்தியடைந்தார். 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி பேசின. பிரிட்டனின் எம்பிக்கள் வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. அதேவேளையில் தங்களுக்கு பணம் வழங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக அரசு விதிகளில் மாற்றம் செய்ய முயற்சிக்கக் கூடாது.

இதில் எம்பிக்கள் பலர் இரண்டாவது பணியிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தரப்பில் கூறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) போரிஸ் ஜான்சனை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

பிரதமர் மீதான நம்பிக்கை இதுவரை இல்லாத அளவு குறைந்து உள்ளதாக தெரிவித்த சர் கீர் ஸ்டார்மர் எல்லோரும் அவருக்காக மன்னிப்பு கேட்டனர். ஆனால் அவர் தனக்காக மன்னிப்பு கேட்க மாட்டார், அவர் ஒரு கோழை, தலைவர் அல்ல என்றும் விமர்சித்தார். 

இது சர்ச்சையை கிளப்ப சர் கீர் ஸ்டார்மர் தனது கருத்தை திரும்ப பெற்றார். எனினும் போரிஸ் தலைவர் அல்ல என உறுதியாக தெரிவித்தார். இந்த பேச்சின்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் குறுக்கிட முயன்றார். அப்போது சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் போரிஸிடம் இது பிரதமர் பதிலளிக்க வேண்டிய நேரம். பிரதமரின் கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதிலளிக்கக்கூடிய நேரம் அல்ல என்று தெரிவித்து அவரை அமரவைத்தார்.

போரீஸ் தொடர்ந்து குறுக்கிடவே, ‘பிரதமர் உட்காருங்கள். நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம். ஆனால் இந்த சபைக்கு நான்தான் பொறுப்பு’ என்று கூறினார். இதனால் பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.