வெளிநாட்டினரை திடீரென போலீசாருடன் சென்று கைது செய்த இங்கிலாந்து பிரதமர் - 105 பேர் அதிரடி கைது!
இங்கிலாந்து பிரதமர் திடீரென ரைடு சென்றதில் மொத்தமாக 105 பேரை கைது செய்துள்ளனர்.
பிரதமர்
இங்கிலாந்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் என்பவர் அந்நாட்டு பிரதமரானதில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதில் இவர் சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.

இவர் தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்துள்ளார்.
ரைடு
இதனை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ரிஷி அதிகாலையில் திடீரென புறப்பட்டு அங்கு உள்ள ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார்.

இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை ரிஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பலர் ஆதரவாகவும், சிலர் அப்பாவியான அகதிகளை இவ்வாறு கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கலவையான விமர்சனத்தினை வைத்து வருகின்றனர்.