இலங்கை பிரதமர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கே தெரியுமா?

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lanka
3 நாட்கள் முன்
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த களேபரங்களுக்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார்.  2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் நியமன எம்.பிக்கள் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கே எம்.பி.யானார். 

இப்படியான நிலையில் வரலாற்றிலேயே ஒற்றை எம்.பி.யை கொண்ட ஒரு கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்த்து வருகின்றன. அதேசமயம் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரணில் நியமனத்தை வரவேற்றுள்ளது. இலங்கைக்கான இந்தியாவின் தூதர் ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்தும் பேசினார். 

இந்நிலையில் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் இந்தியா கடனுதவி  செய்து வருகிறது. தமிழக அரசும் தொடர்ந்து உதவி வருவதால் அவரின் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.