அதிகரித்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு .. எவ்வளவு தெரியுமா?

BJP Narendra Modi
By Irumporai 1 மாதம் முன்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சமாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் சொத்து மதிப்பு

பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த மார்ச் 31-தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

அதிகரித்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு .. எவ்வளவு தெரியுமா? | Pm Narendra Modis Total Assets Rise

அதில் பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த ஆண்டை விட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தை வழங்கிய பிரதமர்

ரூ. 1,97,68,885 ஆக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2,23,82,504 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரித்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு .. எவ்வளவு தெரியுமா? | Pm Narendra Modis Total Assets Rise

பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும், குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை தானமாக வழங்கிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.