என்னது ,மறுபடியுமா ? பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக், ட்விட்டர் பதிவால் பரபரப்பு

bitcoin hacked pmnarendramodi
By Irumporai Dec 12, 2021 03:05 AM GMT
Report

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகு, #Hacked என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இன்று  சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம்  தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ஆனால், மிக விரைவாக இது சரி செய்யப்பட்டு விட்டதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவில் , இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ  ஏற்றுக்கொண்டது என்றும் ,அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசு பிட்காயினை  அனைத்து குடிமக்களுக்கும் விநியோக்கிகும் " என்று ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது. 

என்னது ,மறுபடியுமா ?  பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக், ட்விட்டர் பதிவால் பரபரப்பு | Pm Narendra Modis Personal Twitter Account Hacked

இந்த ட்விட் தற்போது பிரதமரின் ட்விட்டர் பதிவில் இருந்து நீக்கப்பட்டது , ஏற்கனவே கடந்த 2020  செப்டம்பரில் பிரதமர் மோடியின்  ட்விட்டர்  ஹேக் செய்யப்பட்ட போது  கிரிப்டோகரன்சி மூலம் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் கூறுமாறு இருந்தது குறிப்பிடத்தக்கது.