“அதாவது என்னன்னா..ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்” - ஜிம்மில் மாஸ் லிஃப்டிங் செய்யும் பிரதமர் மோடி, வைரலாகும் வீடியோ!

video pm narendra modi working out
By Swetha Subash Jan 02, 2022 01:01 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உத்தரபிரதேசத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.

அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரதமர் மோடி, மீரட்டில் அமைய உள்ள மேஜர் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இயந்திரங்களை ஆய்வு செய்த பின்னர், அங்குள்ள புல்-அப் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

அவரது உடற்பயிற்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரதீப்சில் வகீலா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, ”வலிமையான இந்தியாவின் தூதுவன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரத்தை பரிசோதித்து பார்க்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.