கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் - விஷாலுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி!

Vishal Narendra Modi India
By Sumathi Nov 03, 2022 09:54 AM GMT
Report

விஷால் தெரிவித்த கருத்திற்கு பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விஷால்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஷால். தற்போது இவரது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விஷால் காசி சென்றிருந்தார்.

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் - விஷாலுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி! | Pm Narendra Modi Twitter Reply To Actor Vishal

அதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்விட்டில், அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்கு சென்றேன். அற்புதமான தரிசனம், பூஜை செய்து கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாகவும்,

பிரதமர் மோடி பதில்

எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம் என குறிப்பிட்டிருந்தார். விஷாலின் இந்த பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

அதில் காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.