பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டம்

prime minister narendra modi meets cabinet ministers the day after tomorrow at 11 am
By Swetha Subash Jan 04, 2022 01:45 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அமைச்சர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்வார்கள்.

இன்று காலை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11,007 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், 124 உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1892 ஆக உயர்ந்துள்ளது. 766 பேர் குணமடைந்துள்ளனர்.