பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!
Narendra Modi
Gujarat
By Sumathi
மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்க்கு உடல்நலக் குறைவு
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தனது தாயாரின் ஆசியை பெற்றார்.
தேர்தலில் அவரது தாய் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார்.
அண்மையில், பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மற்றும் குடும்பத்தினர் சென்ற கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.