அதிகரித்து வரும் கொரோனா பரவல் ; பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை

covid spread omicron threat pm meeting
By Swetha Subash Jan 09, 2022 01:25 PM GMT
Report

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் சுகாதார உட்கட்டமைப்புகள், மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகள், அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.