தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி - தொடர்ந்தும் துணை நிற்போம் என உறுதி
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த வாக்காளர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் NDA கூட்டணி எப்போதும் முன்னணியில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
— Narendra Modi (@narendramodi) May 4, 2026
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no…
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.