பிரதமர் மோடியின் பேச்சு திருப்தியளிக்கவில்லை : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசு தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை ஜனாதிபதி வழங்கினார்.
ராகுல் தாக்கு
நாடாளுமன்றத்தில் சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு புரிதல் திறன் குறைவாக உள்ளது என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் தங்களது மனதில் உள்ளதை தான் செயலாக வெளிப்படுத்தி உள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் குடியரசு தலைவரை அவமானம் செய்தார். எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி உரையை குறிப்பிடவே இல்லை. காங்கிரஸ் கட்சியினர் செய்த வினை அவர்களை சுடும் என தெரிவித்த பிரதமர் ஊழல், வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினார்.
பதில் அளிக்காத மோடி
பிரதமர் உரையின்போது, அதானி குழும விவகாரம் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் தனது உரையில் ஒரு இடத்தில் கூட அனைவரும் எதிர்பார்த்த அதானி குறித்த குற்றாசாட்டுக்கு பதிலளிக்கவில்லை. பிரதமர் உரையை முடிக்கும் போதும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் அதானி.. அதானி.. என்று முழக்கமிட்டனர்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் மோடி பேச்சு திருப்தி அளிக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி தனது நண்பர் இலையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும் என்றும் தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.