பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு.., எவ்வளவு தெரியுமா?

Narendra Modi
By Yashini Feb 12, 2026 11:00 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 5 ஆண்டுகளில் (2021–2025) வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு ரூ.462.58 கோடி செலவிட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த செலவில் விமானம், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கும்.

அமெரிக்கா பயணங்களுக்கு மட்டும் மொத்த செலவில் சுமார் 16% பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் பயணங்களுக்கு தலா 9% செலவிடப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு.., எவ்வளவு தெரியுமா? | Pm Modis Jaw Dropping Foreign Travel Expenses

2025 பிப்ரவரியில் நடந்த பிரான்ஸ் பயணம் மிகவும் அதிக செலவானது (சுமார் ரூ.25.5 கோடி).

அடுத்ததாக 2023 ஜூன் மாத அமெரிக்கப் பயணம் ரூ.22.8 கோடி செலவாகியுள்ளது.

அதன்படி, 2014–2019ஆம் ஆண்டுகளுக்கிடையிலான முதல் ஆட்சி காலத்தில் ரூ.446.52 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், 2021–2025ஆம் ஆண்டுகளுக்கிடையிலான இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலப் பகுதிகளில் ரூ.462.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு.., எவ்வளவு தெரியுமா? | Pm Modis Jaw Dropping Foreign Travel Expenses

2020 மற்றும் 2021 தொடக்கத்தில் கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணங்கள் குறைந்திருந்தது.

இந்த செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மேலும், G20 மற்றும் BRICS போன்ற சர்வதேச மாநாடுகளில் இந்தியாவின் பங்கேற்புக்கு இந்த பயணங்கள் அவசியம் என்றும் கூறியுள்ளது.